[X] Close
 

சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு மதுரையை சேர்ந்த 4 பேர் தேர்வு: அடுத்த ஆண்டு அபுதாபியில் நடக்கிறது


special-olympics-olympic-qualification

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.சித்தார்த்தன், ஆர்.ஆர்.நவீன்குமார், பி.தினேஷ்

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 15:05 pm
  • அ+ அ-

அபுதாபியில் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க மதுரையை சேர்ந்த 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர்கள் டி.சித்தார்த்தன் (17), பி.தினேஷ் (29). ஆர்.ஆர்.நவீன்குமார் (18), இ.திவ்யபாரதி (22). மாற்றுத்திறனாளிகளான இவர்கள் மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள பெத்சான் சிறப்பு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இவர்களில் சித்தார்த்தன், தினேஷ் ஆகியோர் சைக்கிளிங் விளையாட்டிலும், நவீன்குமார், திவ்யபாரதி ஆகியோர் முறையே கால்பந்து, பாட்மிண்டனிலும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளனர். 

இந்த நான்கு பேரும் அடுத்த ஆண்டு மார்ச்சில் அபுதாபியில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளில் இருந்து 7 ஆயிரம் மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து இந்த நான்கு பேர் உட்பட 21 பேர் பங்கேற்கின்றனர்.

டி.சித்தார்த்தன், பி.தினேஷ் ஆகியோர் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தயார்படுத்துதலுக்கான முதல் முகாமில் பங்கேற்று திரும்பியுள்ளனர். ஜூன் 19-ம் தேதி தொடங்கும் இரண்டாவது தயார்படுத்தல் முகாமுக்கு செல்ல உள்ளனர்.

பெத்சான் சிறப்பு பள்ளி நிறுவனர் ஏ.பால் கூறியதாவது:

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் மதுரையிலிருந்து 4 மாணவர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. மாவட்டம், மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இறுதியாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

எங்கள் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களின் விளையாட்டுத் திறன் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

- கி.மகாராஜன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close