[X] Close
 

”ரஜினியை காயப்படுத்தணும்னு சொல்லலை!’ - ‘யார் நீங்க’ எனக்கேட்ட இளைஞர் விளக்கம்


youth-explain-about-rajini-issue

  • kamadenu
  • Posted: 01 Jun, 2018 09:00 am
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து

ரஜினியைக் காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல என்று ‘யார் நீங்க’ எனக்கேட்ட இளைஞர் விளக்கமளித்திருக்கிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் சென்றார்.

அப்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ், ரஜினியிடம் “யார் நீங்க?” என்று கேள்வி கேட்டார். அதற்கு “நான்தான்பா ரஜினிகாந்த்” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த். இந்த வீடியோ வைரலாகப் பரவியது. ரஜினியைப் பார்த்து யார் நீங்க என்று கேட்டுவிட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.

இதனால் #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. 

தற்போது ரஜினியைப் பார்த்து ‘யார் நீங்க’ என்று கேட்ட இளைஞர் சந்தோஷ், வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னைப் பற்றிய வீடியோ வைரலாகிட்டு இருக்கு. நான் சொன்ன நோக்கம் வேறு. ஆனால், மீடியா மற்றும் சமூக ஊடகங்கள் அதை வேறு மாதிரி கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. மற்ற அரசியல் தலைவர்கள் பதவியிலிருந்தால் மட்டுமே மதிப்பு. ஆனால், ரஜினிகாந்த் என்பவர் அப்படிக் கிடையாது. அவருக்கு பதவி எல்லாம் தேவையில்லை. ரஜினி என்று சொன்னாலே பெரிய மதிப்புதான். 

போராட்டம் 100 நாட்கள் நடந்தன. 100 நாள் வரவில்லையே, எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் பெரிய சப்போர்ட்டாக இருக்குமே என்ற வருத்தத்தில்தான் கேட்டேன். மக்களுக்காக பணி செய்ய வருபவரிடம் உரிமையில் தான் கேட்டோம். ஆனால், மீடியா ஆட்கள் மற்றும் கிண்டல் செய்பவர்கள் இதனை வேறு மாதிரி கொண்டு போயிட்டு இருக்காங்க. இது, என்னை தனிப்பட்ட முறையில் ரொம்ப பாதிக்கிறது.,
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close