[X] Close
 

சமூக விரோதிகள் ஊடுருவலுக்கான ஆதாரம் எங்கே?- ரஜினிக்கு சரத்குமார் கேள்வி


sarathkumar-slams-rajinikanth

  • பாரதி
  • Posted: 30 May, 2018 14:45 pm
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகள் ஊடுருவலே, என நடிகர் ரஜினிகாந்த், குற்றம் சாட்டியற்கு சரத்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் 100-வது நாளன்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகள் ஊடுருவலே,  திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது" என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், "சமூக விரோதிகள் ஊடுருவல் என்று ரஜினி கூறியிருப்பது பாஜகவின் எதிரொலியாகவே தோன்றுகிறது. மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் ஊடுருவல் என்பது வேதனையளிக்கிறது. இப்படி கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்" என தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close