[X] Close
 

 காவிரியை பண்பாட்டு சின்னமாக அறிவிக்கக் கோரி பயணம்:  குடகு தேசியக் குழுவினர் கும்பகோணம் வருகை


kaveri-traditional-icon

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த குடகு தேசியக் குழுவினர்.

  • kamadenu
  • Posted: 30 May, 2018 12:29 pm
  • அ+ அ-

காவிரி நதியை பண்பாட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தியும், காவிரியை பாதுகாக்க வலியுறுத்தியும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள குடகு தேசியக் குழுவினர் நேற்று கும்பகோணம் வந்தனர். 

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள, குடகு தேசியக் குழுவினர், தலைக்காவிரியில் சமயம், ஆன்மிகம், அரசியல், பண்பாடு என்ற தலைப்பின் கீழ் ஒருங்கிணைப்பாளர் நாச்சப்பா கொடுவா தலைமையில் புனித பயணத்தை கடந்த 24-ம் தேதி தொடங்கினர். 

இந்த குழுவினர் காவிரி நதியின் பயணம் குறித்து வழிநெடுகிலும் எடுத்துரைத்து வருகின்றனர். அதன்படி இக்குழுவினர் தமிழகத்தில் ஒகேனக்கல், மேட்டூர், சேலம், நாமக்கல், திருச்சி, கல்லணை, தஞ்சாவூர், திருவையாறு வழியாக நேற்று கும்பகோணம் வந்தனர். 

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அப்போது, அன்னை காவிரியின் ஆன்மிகத் தூண்டல்கள் மனித குலத்தை அடைய வேண்டும். எல்லா மக்களும், உயிரினங்களுக்கும் காவிரி அன்னையின் அருள் கிடைக்க வேண்டும்.

காவிரி வறண்டு போகாமல்எப்போதும் நீர் நிலைத்திருக்க வேண்டும். மத்திய அரசு காவிரியை பாதுகாக்க முன் வரவேண்டும். காவிரியை பண்பாட்டு, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். 

காவிரியை தூய்மையாக வைத்திருக்க அரசும், பொதுமக்களும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து இக்குழுவினர் மயிலாடுதுறை வழியாக காவிரி கலக்கும் பூம்புகார் கடற்கரைக்கு சென்று அங்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close