[X] Close

திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது: இறுதி நாளில் கூட்டம் காட்டிய அனைத்து அரசியல் கட்சியினர்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 09:01 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்ததால் திருப்பரங்குன்றமே ஸ்தம்பித்தது.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் நாளை (மே 19) நடக் கிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஒய்ந்தது. இறுதி நாள் என்பதால் நேற்று அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர் களுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரம் செய் தனர்.

அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சம்பத், திண்டுக்கல் சி.சீனிவாசன், புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், உள்ளிட்டோர் பேசினர்.

திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 17 இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவர் கடைசியாக திருநகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அமமுக வேட்பாளர் இ.மகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் இருந்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாகச் சென்று இறுதிகட்டப் பிரச்சாரம் செய்தனர். இதில் இளைஞர் அணிச் செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ், மாவட்டச் செயலாளர்கள் கரிகாலன், ம.ஜெயபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி உள்ளிட்டவர்களும் தங்கள் கட்சியினருடன் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து அரசியல் கட்சியினர் திருப்பரங்குன்றத்தில் நேற்று மாலையுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். ஒரே நேரத்தில் அவர்கள் பெருமளவில் குவிந்ததால் திருப்பங்குன்றம் நேற்று ஸ்தம்பித்தது.

துணை ராணுவம் அணிவகுப்பு

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர் தலையொட்டி, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், உதவி ஆணையர் ராமலிங்கம் தலைமையில், நூறுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் திருநகர் உட்பட பல பகுதிகளில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close