[X] Close

ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் நிறைவு: அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:55 am
  • அ+ அ-

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை (19-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதிமுக வேட்பாளர் பெ.மோகன் நேற்று மாலை புதியம்புத்தூரில் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

அங்கிருந்து ஊர்வலமாக ஓட்டப்பிடாரம் தேரடி திடலுக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சி.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், கடம்பூர் ராஜு, ஆர்.காமராஜ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சமக தலைவர் சரத்குமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் வந்தனர்.

திமுக வேட்பாளர்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சி.சண்முகையா நேற்று காலையில் தருவைகுளத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஆதரவு திரட்டினார். மாலையில் தாளமுத்துநகர் ராம்தாஸ்நகர் பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, தாளமுத்துநகர் பகுதியில் கட்சியினருடன் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ, மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

அமமுக வேட்பாளர்

அமமுக வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் நேற்று மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, மாலையில் தாளமுத்துநகர் அருகேயுள்ள டேவிஸ்புரம் பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் உள்ள அந்தோணியார் கெபிக்கு மாலை அணிவித்தார். அவருடன் அமமுக தென் மண்டல பொறுப்பாளர் எஸ்விஎஸ்பி. மாணிக்கராஜா, அமைப்புச் செயலாளர் காமராஜ், ஆர்.பி.ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close