[X] Close

கரூர் மகாதானபுரம் அருகே லாரி மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழப்பு: அவினாசி அருகே நடந்த மற்றொரு விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் மரணம்


4-6-3

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:01 am
  • அ+ அ-

கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் கீழ மாயனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). இவர், தன் மகள் அருணா, மருமகன் சிவக்குமார்(35), பேரக் குழந்தைகள் ஒன்றரை வயதான ஜோஸ்வந்த், ஒன்றரை மாதமே யான சுஷாந்த் கிருஷ்ணா மற்றும் உறவினர்கள் கோமதி(24), நவீன் (23). கிஷோர்(12) ஆகியோருடன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஈச்சங்கோட்டையில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு மாயனூரில் இருந்து நேற்று காரில் புறப்பட்டார்.

காரை சிவக்குமார் ஓட்டினார். மகாதானபுரம் அருகேயுள்ள பொய்கைபுதூர் என்ற இடத்தில், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல சிவக்குமார் முயன்றார். அப்போது, எதிரே பாரம் ஏற்றி வந்த லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதியது. இதில், காரின் முன்பகுதி லாரியில் சிக்கி சேதமடைந்தது.

இச்சம்பவத்தில், படுகாய மடைந்த கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். ஜோஸ் வந்த், சுஷாந்த் கிருஷ்ணா, நவீன், அருணா ஆகியோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு இறந்தனர். சிவக்குமார், கோமதி ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் முருகேசன்(27), லாலாபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந் தார்.

தம்பதி உட்பட 3 பேர் மரணம்

அவினாசி அருகே நடந்த மற்றொரு விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதி யில் வசித்து வந்தவர் ரமேஷ் (30). இவர், மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3) ஆகியோருடன் திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குடியாத்தத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மங்கலம் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஈஸ்வரன் உயிரி ழந்தார். ஆபத்தான நிலையில் ரமேஷ், அவரது மனைவி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். லேசான காயம் அடைந்து உயிர் தப்பிய நித்திகா, சிகிச்சைக்குப் பிறகு ரமேஷின் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அவினாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close