[X] Close

திண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் இறந்த வழக்கு: கொலை வழக்காக மாற்றி மூத்த மகனிடம் போலீஸார் விசாரணை


3

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:58 am
  • அ+ அ-

திண்டிவனம் அருகே காவேரிபட்டி னத்தில் வெல்டிங் கடை நடத்தி வந்தவர் ராஜூ. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு கோவர்த்தனன், கவுதமன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

கவுதமனுக்கு ஜூன் 6-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் திருமண ஏற்பாடு களில் தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில் ராஜூ தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் கடந்த 14-ம் தேதி உறங்கிக் கொண்டிருக்க, மற்றொரு அறையில், 6 மாதத்துக்கு முன் திருமணம்முடித்த மூத்த மகன் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். அன்று அதிகாலை ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, இயந்திரம் வெடித்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும்,சப்தம் கேட்டு கோவர்த்தனனும் அவரது மனைவியும் ராஜூவின் அறைக்கு சென்றதில் அவர்களும்மயங்கி விழ, இருவரும் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டதாகவும் போலீஸார் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலைச்செல்வி யின் சகோதரர் ஜெய்சங்கர் என்பவர், தனது சகோதரி விபத்தில் இறக்கவில்லை எனவும், இறந்த ராஜூவின் உடலில் ரத்தக் கறை இருந்ததாகவும், எனவே இது திட்டமிட்டக் கொலை என்றும் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி ராஜூவின் மகன் கோவர்த்தனனிடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜூவுக்கு அதிகசொத்து இருப்பதால், சொத்துக்காக கூலிப் படையை வைத்து கொலை நடந்திருக்கலாம் எனசந்தேகிக்கும் போலீஸார் அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, ஏசி இயந்திரம் வெடித்துதான் 3 பேரும் இறந்தனரா என கண்டறிய ஏசி பழுது நீக்கும் மெக்கானிக்கைக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். மேலும்பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்னரே இறுதி முடிவுஎடுக்க முடியும் என்று போலீஸார்தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close