[X] Close

கமல்ஹாசன் மீது முட்டை, காலணி வீச்சு: பாஜக இளைஞரணி நிர்வாகி கைது


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:59 am
  • அ+ அ-

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் மீது முட்டை, காலணி வீசியது தொடர்பாக பாஜக இளைஞரணியின் கரூர் ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கமல்ஹாசன், வேலாயுதம்பாளை யத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டம் முடிந்து மேடையிலி ருந்து இறங்கிக் கொண்டிருந்த அவரை நோக்கி, கூட்டத்தில் இருந்த ஒருவர் முட்டை, காலணிஆகியவற்றை வீசினார். கமல்ஹாசனுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி மநீம வேட்பாளர் சம்பத் ராமதாஸின் முகத்தில் பட்டு முட்டை உடைந்தது. காலணிஅவர்களுக்குப் பின்னால் விழுந்தது.

இதையடுத்து முட்டை, காலணி வீசியவரை மநீம தொண்டர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். அவரை மீட்ட போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் நெரூர் மறவாபாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(25) என் பதும், பாஜக இளைஞரணியின் கரூர் ஒன்றியச் செயலாளர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, முட்டை, காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர். நேற்று காலை கரூர் ஜேஎம் 2-ம் எண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close