[X] Close

காந்தியை கோட்சே கொன்றதை நியாயப்படுத்துகிற மன்னார்குடி செண்டலங்கார ஜீயருக்கு ஸ்ரீகிருஷ்ணர் தண்டனை வழங்குவார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:51 am
  • அ+ அ-

மகாத்மா காந்தியை கோட்சே கொன்றதை நியாயப்படுத்திப் பேசும் மன்னார்குடி ஜீயருக்கு ஸ்ரீகிருஷ்ணர் தண்டனை வழங்குவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ், இந்து மகா சபைபோன்ற அமைப்புகள்கூட இதுவரை மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஒன்றுபடுத்தி, மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்தியது இல்லை. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் மறு அவதாரமாக நான் பார்க்கும் மன்னார்குடி ஜீயர், “மகாத்மா காந்தியும், கோட்சேவும் தேச பக்தர்கள். தேசப்பற்றின் காரண மாகத்தான் மகாத்மாவை கோட்சே கொலை செய்தார்” என்று பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்ரீராமானுஜரை சோழ மன்னர் கைது செய்ய முயன்றபோது, அவருக்கு பதிலாக ஸ்ரீகூரத்தாழ்வார் 2-ம் குலோத் துங்க சோழனிடம் ஆஜரானார். ராமானுஜரை தண்டிப்பதற்கு பதிலாக கூரத்தாழ்வாரின் இரு கண்களையும் பிடுங்குமாறு சோழ மன்னர் கட்டளை யிட்டார். உடனே கூரத்தாழ்வார், ‘‘நீ என்ன கட்டளையிடுவது? நானே என் கண்களைப் பிடுங்கிக் கொள்கிறேன்’’ என்று கூறி, இரு கண்களையும் பிடுங்கி தூர எறிந்தார். வைணவம் நமக்குச் சொல்லியிருப்பது இதுதான்.

மகாத்மா காந்தியையும், கோட் சேவையும் ஒன்றுபடுத்தி ஜீயர் பேசியதைக் கேட்ட அதிர்ச்சியில், என் இரு கண்களையும் பிடுங்கி எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தேன்.

மத நம்பிக்கை வேறு. அந்த நம்பிக்கையை வேறு ஒருவர் மீது திணிப்பது என்பது வேறு. இதை எந்த மதத்தினர் செய்தாலும், அதை காங்கிரஸ் எதிர்க்கும்.

மகாபாரதத்தில் வரும் தருமரும், துரியோதனனும் ஒன்றா? ஸ்ரீகிருஷ்ண ரும், சிசுபாலனும் ஒன்றா? ராமரும், ராவணனும் ஒன்றா? ஸ்ரீகிருஷ்ணரும், நரகாசுரனும் ஒன்றா? என்று ஜீயரிடம் பணிவாக கேட்க விரும்புகிறேன். இதற்கு பதில் சொன்னால், மகாத்மா காந்தியும், கோட்சேவும் ஒன்றல்ல என்பதை ஜீயர் புரிந்துகொள்வார்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக் காக ஒருவரைக் கொல்வது நியாயமா? சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மிகப் பணிகளால் இந்து மதத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைச் செய்தார். அதை சீர்குலைக்கும் வகையில் ஜீயர் போன்றவர்கள் செயல்படக் கூடாது.

மகாத்மா காந்தியை கோட்சே கொன்றதை நியாயப்படுத்திப் பேசும் ஜீயருக்கு, ஸ்ரீகிருஷ்ணர் மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டுகிறேன்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரி வித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close