[X] Close

வருமானவரித் துறை பறிமுதல் செய்த ரூ.80 கோடி குறித்து தொடர்ந்து விசாரணை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


80

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:49 am
  • அ+ அ-

தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ம்தேதி முதல் தற்போது வரை வருமானவரித் துறை பறிமுதல் செய்த ரூ.80 கோடி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்றுமுதல் நாடு முழுவதும் தேர்தல்நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம்கொண்டு சென்றால் ஆவணங்கள்வைத்திருக்க வேண்டும். தங்கம்உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் கொண்டு செல்லும்போது, உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின் உரியஆவணங்கள் அடிப்படையில்திருப்பியளிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுநேற்று கூறுகையில், ‘‘பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஆய்வின்போது, ரூ.156கோடியே 86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.114 கோடியே50 லட்சம் திருப்பியளிக்கப்பட்டது. ரூ.42 கோடியே 36 லட்சம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. வருமான வரித்துறையினர் ரூ.79 கோடியே 75 லட்சம் பறிமுதல்செய்தனர். இதில் எந்த பணமும்திருப்பி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close