[X] Close

அண்ணா பல்கலை. நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிடுகிறதா?- துணைவேந்தர் எம்.கே.சுரப்பா பதில்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:47 am
  • அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக நிர் வாகத்தில் தமிழக அரசு தலையிடு கிறதா என்ற கேள்விக்கு துணை வேந்தர் எம்.கே.சுரப்பா பதில் அளித் துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப் பட்டதின் 225-ம் ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் எம்.கே.சுரப்பா கலந்துகொண்டு புகைப்படக் கண் காட்சியைத் தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, "மிகவும் பழமை வாய்ந்த கிண்டி பொறி யியல் கல்லூரி, அனுபவம் வாய்ந்த மூத்த அறிஞர்களையும், பல்துறை தொழில்நுட்ப நிபுணர்களையும் உருவாக்கிய பெருமை நிறைந் தது" என்றார்.

இவ்விழாவில், பல்கலைக் கழகப் பதிவாளர் ஜெ.குமார், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் டி.வி.கீதா, பழைய மாணவர்கள் சங்கத் தலைவர் ஜி.ரவிகுமார், செயலாளர் ஏ.சிவகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவி கள் கலந்துகொண்டனர்.

விழா முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந் தர் எம்.கே.சுரப்பா கூறியதாவது:

கடந்த நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக் கையும் எடுக்க முடியாது.

மாணவர்கள் அக்கறை யுடன் படித்தால் மட்டுமே இது போன்ற பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். முந்தைய செமஸ் டர் தேர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி வீதம் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் குறைந்துள்ளது.

300 பாடப் பிரிவுகள் மூடல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்த வேளாண் மற்றும் நீர் பாசனம் பொறியியல் பட்டப்படிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது. தேவை யான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 92 தனியார் பொறி யியல் கல்லூரிகளில் 300 பாடப் பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக் கப்பட்டது. கல்லூரிகளின் பெயரை வெளியிட்டால் அது எதிர் மறையான கருத்துகளை உரு வாக்கும் என்பதால் பெயர்களை வெளியிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசிடமிருந்து அழுத்தமா?

பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசிடமிருந்து அழுத்தம் வரு வதாக துணைவேந்தர் கூறியிருந் தார். ஆனால், இந்த குற்றச்சாட் டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகை யில் முதல்வர் பழனிசாமி, ‘அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தனிப்பட்ட முறையில் அரசு அழுத்தம் ஏதும் தரவில்லை’ என்று நேற்று விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து துணைவேந்தரிடம் செய்தியாளர் கள் கேட்டதற்கு, "பொதுவாக முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு சமூக ரீதியாக வும் வேறு சில இடங்களில் இருந் தும் அழுத்தம் வருவது இயல்பு, ஆனால் அதை, அந்த நபர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே முக்கியம்.

எனக்கு தேவையான எல்லா ஒத்துழைப்பும் கிடைக் கிறது, தனிப்பட்ட ரீதியில் எனக்கு அரசிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close