[X] Close

அன்வர் ராஜா மீது தாக்குதல்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:41 am
  • அ+ அ-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிஇடைத்தேர்தல் பொறுப்பாளரான அதிமுக எம்.பி. அன்வர்ராஜா நேற்று கரூரில் இருந்துபள்ளபட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட மண்மாரி என்ற இடத்துக்கு சென்றபோது, அங்கு அமமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் திடீரென அன்வர்ராஜாவின் வாகனத்தை மறித்தனர். அவர் கீழே இறங்கியதும் அவரை தாக்கியதுடன், வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிய அன்வர்ராஜா, பள்ளபட்டி சென்று முன்னாள் நகரச் செயலாளர் டி.எம்.அபுதாகீரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அன்வர்ராஜாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அபுதாகீர் புகார் கொடுத்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close