[X] Close

தண்டவாளம், சுரங்கப்பாதை கட்டுமான பணியால் அரக்கோணம் தடத்தில் 100-க்கும் மேற்பட்ட மின் ரயில்கள் ரத்து: இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு


100

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:40 am
  • அ+ அ-

அரக்கோணம் மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான பணி இன்றும், நாளையும் நடக்கவுள்ளதால், 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்குரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை கடற்கரை - அரக்கோணம் தடத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் யார்டு தண்டவாள பணியும், புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் 18-ம் தேதி (இன்று) இரவு 9.40 மணி முதல் ஞாயிறு காலை 9.40 மணிவரை நடக்கவுள்ளது. இதனால், மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரலில் இருந்து திருவள்ளூ ருக்கு இரவு 8.55, 9.40, 11.10, 11.45 அரக்கோணத்துக்கு இரவு 9.15, 10.10, 10.45 மற்றும் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு 9.55, ஆவடிக்கு இரவு 10.10, திருத்தணி - சென்ட்ரல் இரவு 9.45, அரக்கோணம் - சென்ட்ரல் இரவு 9.25, 9.45 மணிக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், 19-ம் தேதி சென்ட்ரல் - திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும். அரக்கோணம் - சென்னை கடற்கரைக்கு காலை 6.25 மணிக்கு செல்லும் மின்சார விரைவு ரயில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

அரக்கோணம் தடத்தில் நாளை அதிகாலை 1.20 மணி முதல் காலை 10.45 மணி வரையில் பணி நடக்கவுள்ளதால், சென்ட்ரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணம், வேலூரில் இருந்து சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய 41 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்

சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 8.55, 11.45, 11.55 மணிக்கும், அரக்கோணத்துக்கு இரவு 9.20, 10.20 மணிக்கும், ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கும் இன்று பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் வேப்பம்பட்டு, செவ்வாபேட்டை ரோடு ரயில் நிலையங்களில் நிற்காது. இதேபோல், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து இரவு 9.55, 10 மணி, திருவள்ளூரில் இருந்து இரவு 10 மணிக்கும் சென்ட்ரலுக்கும், திருவள்ளூர் - ஆவடிக்கு இரவு10.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நாளை சிறப்பு ரயில்கள்

சென்ட்ரல் - திருப்பதிக்கு காலை 7.30, சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு அதிகாலை 4.40, 5.10, 6.15, 8.05 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 3.45, 4.40, 6.00, 6.40, 9.15 மணிக்கு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் - சென்னை கடற்கரைக்கு காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்கள் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச் சேரி, பட்டாபிராம் ரயில்நிலையங்களில் நிற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close