[X] Close

டெல்லி ஜேஎன்யு பல்கலையில் வேலூர் மாணவர் தற்கொலை


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:38 am
  • அ+ அ-

வேலூரைச் சேர்ந்த மாணவர் கடுமையான மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரியும் தம்பதி நிஹால் தாமஸ், மாயா தாமஸ். இவர்களது மகன் ரிஷி ஜோஷ்வா (24), டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆங்கிலம் இறுதியாண்டு படித்துவந்தார். அங்குள்ள மஹி மாந்தவி விடுதியில் தங்கியிருந்தார்.

பல்கலைக்கழக ஆங்கில துறையின் வாசிப்பு அறையில் அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில நாட்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பங்கேற்காத நிலையில் மறு வாய்ப்பு கோரி ஆங்கிலத் துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி வசந்த் குஞ்ச் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்ததும் ரிஷி தாமஸின் பெற்றோர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close