[X] Close

நாளைய வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி காணொலியில் ஆய்வு: 10 மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் பங்கேற்பு


10

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:36 am
  • அ+ அ-

நாளை நடக்க உள்ள வாக்குப்பதிவு, மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, காணொலிக் காட்சியில் ஆய்வு நடத்தினார்.

இதுதொடர்பாக தமிழக தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 19-ம் தேதி (நாளை) வாக்குப்பதிவு நடக்கிறது. அத்துடன் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு, மறு வாக்குப்பதிவு நடக்கும் 10 மாவட்டங்களின் ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அப்போது, வாக்குச் சாவடியில் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வாக்குப்பதிவுக்கு தேவையான தளவாடப் பொருட்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது, அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிப்பது ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு நாளில் சுவீதா, பிஎம்எஸ் செயலி மூலம் அறிக்கைகள் பதிவிடுதல், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை கையாளும் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விதிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக பணம் எடுத்துச் செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று கண்காணித்து தடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, கூடுதல் தலைமை தேர்தல்அதிகாரிகள் எம்.பாலாஜி, வி.ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள்தீபக் ஜேக்கப், வே.மணிகண்டன், காவல்துறை தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஜெயராமன், சேஷசாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close