[X] Close

ரூ.20 லட்சத்துடன் வந்த அதிமுக எம்.பி.யிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை


20

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:35 am
  • அ+ அ-

டெல்லியில் இருந்து ரூ.20 லட்சம் பணத்துடன் விமானத்தில் சென்னை வந்த ஆரணி தொகுதி அதிமுக எம்.பி ஏழுமலையிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செஞ்சி ஏழுமலை, டெல்லியில் இருந்து விமானத்தில் நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அவர் ரூ.20 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இதுபற்றி வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமானவரித் துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஏழுமலையிடம் விசாரணை நடத் தினர்.

மகளின் படிப்புக்காக டெல்லி யில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்து வந்ததாக ஏழுமலை தெரிவித்தார். இதையடுத்து, ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள், பின்னர் பணத்தை எம்.பி.யிடம் திரும்ப வழங்கினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close