[X] Close

நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை; மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு: மே 20-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


20

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:34 am
  • அ+ அ-

தமிழகத்தின் எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்திமற்றும் விநியோக நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த 2014-ல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து 75 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரித்தநீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘வணிக ரீதியில்தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379-ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க ‘ப்ளோமீட்டர்’ கருவிகளை பொருத்தி அவற்றை முறையாக பரிசோதிக்க வேண்டும். தண்ணீரை தேவையின்றி வீணடிப்பவர்கள் மீது மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். ப்ளோ மீட்டர் பொருத்தப்பட்ட பிறகும், வரையறுக்கப்பட்ட அளவைத் தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிரத்யேக கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளதாகவும், இதனால்மக்கள் கடுமையாக அவதியடைந்து வருவதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளார்.

நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தமிழகம்முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தலைநகரமான சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் அதை அமல்படுத்தவில்லை. தண்ணீர் பஞ்சம்ஒருபக்கம் என்றால் தண்ணீர் திருட்டு மறுபக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குநர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து வரும் மே 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close