[X] Close

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்: கால மாற்றங்களின் சாட்சிகளை புறக்கணிக்கலாமா?


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:29 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

`மாற்றம் ஒன்றுதான் மாறாதது' என்ற வார்த்தைகள் இந்த உலகுக்கு மிகப் பொருத்தமானவை. பூமி தோன்றியது முதல் இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரலாற்று மாற்றங்களுக்கெல்லாம் சாட்சி களாய் இருப்பவை அருங்காட்சி யகங்கள்.

மனித இனத்தின் தொன்மை, வரலாறு, மரபுகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாது காத்து, எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள உதவுபவை அருங்காட்சியகங்கள். அவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடம் உணர்த்துவதற்காகவும், முறை சாரா கல்வி மையங்களான அருங் காட்சியகங்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 1977-ம் ஆண்டு முதல், மே 18-ம் தேதியை சர்வதேச அருங்காட்சியக தினமாக அறிவித்தது பன்னாட்டு அருங்காட்சியகங்கள் கூட்டமைப்பு.

உலகின் மிகப் பெரிய அருங் காட்சியகம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம். இந்தி யாவைப் பொறுத்தவரை, மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் 1814-ல் நிறுவப்பட்ட அருங்காட்சி யகம்தான் இந்தியாவின் முதல் அருங்காட்சியமாகும். 1851-ல் சென்னையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் நாட்டின் 2-வது அருங்காட்சியகம்.

தொல்லியல் அருங்காட்சியகம், ரயில் அருங்காட்சியகம், ஜவுளி, ஓவியம், விமானவியல், உயிரியல், குழந்தைகள் அருங்காட்சியகம் என பல்வகையான அருங்காட்சி யகங்கள் உண்டு.

அதேபோல, அரசு சார்பில் தமி ழகத்தில் 21 மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையிலான பொருட்கள் அருங்காட்சியகங் களில் இடம்பெற்றுள்ளன. குறிப் பாக, புதைபொருட்கள், சிலைகள், கல்வெட்டுகள், படிமங்கள், செப் பேடுகள், ஓலைச் சுவடிகள், பெருங் கற்கால மண்பாண்டங்கள், முன் னோர் பயன்படுத்திய ஆயுதங்கள், இசைக் கருவிகள், ஈமத்தாழி, பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருட்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், அரிய, அழிந்து வரும் தாவரங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், ஒரு வட் டாரத்தின் இயற்கை அமைப்பான கனிமங்கள், ஓவியங்கள் என அருங்காட்சியகங்களில் இல்லாத பழம்பொருட்களே இல்லை எனலாம்.

ஆனால், இவ்வளவு சிறப்பு மிகுந்த அருங்காட்சியகங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக் கிறோமா என்பது கேள்விக்குறியே? மால்கள், பூங்காக்கள், திரையரங்கு களுக்கு கும்பல் கும்பலாகச் செல்லும் நிலையில், அருங்காட்சி யகங்கள் பல நேரங்களில் வெறிச் சோடுகின்றன. பொழுதுபோக்கு விஷயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அருங்காட்சி யகங்களுக்கு கொடுப்பதில்லை என்ற நிலை மாற வேண்டும்.

வரலாற்றுப் பதிவுகள்

இதுகுறித்து கோவை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவக்குமார் `இந்து தமிழ்` செய்தியாளரிடம் கூறியதாவது:

ஒரு சமூகத்தின், இனத்தின், நாட்டின் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள உதவுவது பண்டைய பொருட்களே.

பூமிக்கு அடியில் கிடக்கும் பொருட்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரி வித்தால், மாவட்ட நிர்வாகம் மூலம் மீட்கப்பட்டு, அரசு அருங்காட்சியகத் துக்கு கொண்டுவரப்படும். அதை ஆய்வு செய்து, வரலாற்றை அறிந்து, குறிப்புகளுடன் காட்சிப் படுத்தும்போது வரலாற்று மாண வர்கள் மட்டுமின்றி, அனைவ ருமே அதன் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

கோவையில் அரசு அருங்காட்சி யகம் மட்டுமின்றி, ஜி.டி.நாயுடு தொழில்நுட்ப அருங்காட்சியகம், கைவினைப் பொருட்கள் அருங் காட்சியகம் போன்று பல்வேறு அருங்காட்சியகங்கள் அமைந்துள் ளன.

அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, அருங்காட்சியகங்கள் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல் வேறு கருத்தரங்குகள், சொற்பொழி வுகள், மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு, விநாடி-வினா போட்டிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு கண்காட்சிகள் ஆகியவை நடத்தப் படுகின்றன" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close