[X] Close

‘இந்து’ என எப்போது அழைக்கப்பட்டோம்: கமல் ட்வீட்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 21:34 pm
  • அ+ அ-

கோட்சே சர்ச்சையில் கமல் மீது வழக்குகள், தனி மனிதத் தாக்குதல்கள், ஆதரவு கருத்துகள், தேர்தல் பிரச்சாரத் தடை என பலவித ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகள் வரும் நேரத்தில்  இந்து என்று எப்போது அழைக்கப்பட்டோம் என கமல் ட்வீட் செய்துள்ளார்.

தமது பிரச்சாரத்தைத் தடை செய்ததை சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்கிறார். இறுதியில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் இந்தியராக இருப்போம் எனும் அவர் கோடி என்றால் உனக்குப் பணமாகத் தெரிந்தால் நீ தலைவனும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல என்று கூறி வெறும் வியாதி என்று பதிவிட்டுள்ளார்.

கமலின் ட்வீட் பதிவு:

“சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றன  மத்திய -மாநில அரசுகள்.

மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்யமுடியாது.

12 ஆழ்வார்களாலோ,  63 நாயன்மார்களாலோ இந்து என்கிற மதக் குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குப் பின் ஆளவந்தாராலோ ‘இந்து’ என நாமகரணம் சூட்டப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை?

நாம் ‘இந்தியர்’ என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம் நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு..

''கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். ‘கோடி’ ன்னா  உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல வெறும் வியாதி.

தமிழா நீ  தலைவனாக வேண்டும், இதுவே என் வேண்டுகோள்''.

இவ்வாறு கமல் ட்வீட் செய்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close