[X] Close
 

சென்னையில் வெயில் இன்று 40 டிகிரியைத் தொட வாய்ப்பு: வெதர்மேன்


chennai-city-is-expected-to-see-hot-above-normal-3-4-days

  • பாரதி
  • Posted: 29 May, 2018 14:04 pm
  • அ+ அ-

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டது. ஆனால், காலண்டரில் மட்டும்தான் முடிந்துவிட்டது என எண்ணத்தோன்றும் அளவுக்கு சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில், வானிலை ஆர்வலர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், இன்று சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் வரை எட்ட வாய்ப்புள்ளதாகக் கூறியிருக்கிறார்.

சற்றுமுன் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சென்னையின் வெப்பமான நாள் இது என்று கூறும் அளவுக்கு இன்று சென்னையில் வெப்பம் 39 டிகிரியைக் கடந்து கொண்டிருக்கிறது. சென்னை நகர் கடந்த மூன்று நாட்களில் அனுபவித்ததைவிட அதிக வெப்பத்தை இன்று காண நேரும். ஒருவேளை இன்று வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அளவில்கூட பதிவாகலாம். அப்படி பதிவானால் இந்த ஆண்டு முதன்முறையாக சென்னையில் வெயில் 40 டிகிரியைத் தொட்டதாக அமையும். அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

காரணம் என்ன?
"வட மேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று ஓராண்டுக்குப் பின் சென்னைப் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாகவே சென்னையில் வெப்பம் வாட்டி வதைக்கிறது" என அவர் விளக்கியிருக்கிறார்.

மேலும், "அடுத்த மூன்று நாட்கள்தான் சென்னைக்கு உண்மையான கோடை வெயில் காலமாக இருக்கப்போகிறது. நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடற்காற்று மட்டும்தான். 3 நாட்களுக்குப் பின் நாம் எதிர்பார்க்கும் மழை நம் சென்னையில் பெய்ய வாய்ப்புள்ளது. 2017 டிசம்பர் 1-ம் தேதிக்குப் பின் சென்னையில் இதுவரை பலத்த மழை பெய்யவே இல்லை" என அவர் பதிவிட்டிருக்கிறார்.

இந்தக் கட்டுரையையும் படிக்கலாம்...

பாகுபலிதான் பார்ட் 2... அக்கினி வெய்யிலுமா? சென்னை செம ஹாட் மச்சி! 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close