[X] Close

எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப வாக்களியுங்கள்: திருப்பரங்குன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 13:18 pm
  • அ+ அ-

"மோடியை வீட்டுக்கு அனுப்ப ஏற்கெனவே வாக்களித்துவிட்டீர்கள். இப்போது மோடியின் அடிமையான எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வாக்களியுங்கள்" எனக் கூறி பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்தார்.

காலை 9 மணிக்கு ஐராவதநல்லூர் பகுதியில் தொடங்கி, விரகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளருக்காக அவர் ஆதரவு திரட்டினார்.

ஐராவதநல்லூரில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஏற்கெனவே முடிவு செய்து, ஏப்.18-ல் தங்களது வாக்குகளை பதிவு செய்துவீட்டீர்கள்.

இந்தியாவின் வில்லனான மோடியின் அடிமை எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப இந்த நான்கு தொகுதியிலும் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புவீர்கள் என நான் நம்புகிறேன். அனுப்புவீர்களா? 

ஏற்கெனவே இந்த அரசுக்கு எதிரான ஓட்டுக்கள் அடங்கிய பெட்டி தயராகிவிட்டது. அப்பெட்டியை மூடும் வகையில் நான்கு மூளையிலும் அடிக்கும் ஆணியாக இத்தொகுதி உட்பட 4 தொகுதிகளும் அமையவேண்டும்

 

u2.jpg

 

திமுக தேர்தல் அறிக்கையில் கல்வி, விவசாயம், நகைக்கடன் கள் ரத்து உட்பட பல்வேறு சலுகைகள் இடம் பெற்றுள்ளன. வெற்றி பெறும்போது, இதெல்லாம் சாத்தியமாகும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் டிஆர்.பாலு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி எம்எல்ஏ, மாவட்ட செயலர் மணிமாறன், விவசாய அணி இணைச் செயலர் ரவீந்திரன், நிர்வாகிகள் மணி, சம்சுதீன், சந்திரசேகர், ஊராட்சி செயலர் சந்திரன், ஒன்றிய செயலர் தனபால் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close