[X] Close

பணப் பட்டுவாடா நடைபெறுவது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா?- கமல்ஹாசன் கேள்வி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:14 am
  • அ+ அ-

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடா நடைபெறுவது உங்களுக்கும், எனக்கும் தெரிகிறது. இதுதேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மநீம வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார்.

தென்னிலையில் கமல்ஹாசன் பேசியதாவது: அரவக்குறிச்சி தொகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகளவில் உள்ளது. நாங்கள் உங்கள் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவோம். ஆட்சியில் உள்ளவர்கள் இப் பிரச்சினை குறித்து கவனித்து நடவடிக்கை எடுத்து தீர்த்து வைத்திருக்க முடியும். ஆனால், நாம் தூங்கிக்கொண்டு இருந்ததால் அவர்கள் எதையும் செய்து தரவில்லை. இனியாவது நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து தொப்பம்பட்டியில் பேசிய கமல்ஹாசன், "அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் வாக்குக்கு பணம் கொடுப்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியவில்லை. பணப் பட்டுவாடா குறித்து இனியாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை"என்றார்.

தொடர்ந்து நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், நேற்றிரவு வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்துப் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close