[X] Close

வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட பிறகு நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை: போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார்; ஏடிஎஸ்பி விசாரணை


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:10 am
  • அ+ அ-

ஆத்தூரில் நிதி நிறுவன உரிமையாளர் ஒருவர் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்துஏடிஎஸ்பி தலைமையில் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(49). இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஆத்தூரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய சிலர், பணத்தை திரும்பத் தராமல் தன்னை மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 14-ம் தேதி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டார்.

அதில், “நாங்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற சிலர் அந்த பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வந்தனர். அதனை கேட்டபோது, ஜாதி பெயரைக் கூறி அவர்களைத் திட்டியதாக, தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீதும், எனது சகோதரர் மீதும் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக எங்களை மிரட்டினர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், தன்னிடம் கடன் வாங்கி,அதனை திரும்பத் தராதவர்கள் சிலரது பெயர், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தனது இளைய மகன் வழக்கறிஞருக்கு படிக்க வேண்டும்.

தன்னைப்போல பாதிக்கப்படுபவருக்காக நீதிமன்றத்தில் வாதாடி,நியாயம் பெற்றுத் தர வேண்டும்” என்பதை தனது இறுதி விருப்பமாகக் கூறியிருந்தார். இந்த வீடியோவாட்ஸ்அப்பில் வைரலானது.

இந்நிலையில், விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரேம்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மாவட்ட எஸ்.பி.தீபா காணிக்கர் ஆத்தூர் காவல் டவுன் நிலையத்துக்கு சென்று நேற்று விசாரணை நடத்தினார். பிரேம்குமார் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, பிரேம்குமார் மகன் அரவிந்தன் அளித்த புகாரில், பிரேம்குமாரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாத நபர்,தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பிரேம்குமார் மற்றும்அவரது சகோதரர் மீதும் பொய்புகார் கொடுத்ததாகவும், அந்தவழக்கை முடித்து வைக்க டிஎஸ்பி.,ஆய்வாளர் ஆகியோர் பணம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.தீபா காணிக்கர் கூறும்போது, “ஏடிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் போலீஸார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே, புகாருக்கு ஆளான ஆத்தூர் டவுன் காவல் ஆய்வாளர் கேசவன், ஊட்டியில் நடைபெறும் மலர்க்கண்காட்சி பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close