[X] Close

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:14 am
  • அ+ அ-

சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்ற பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: இந்து மதத்தைப் பற்றி தான் பேசவில்லை என கமல்ஹாசன் இப்போது கூறியுள்ளார். சுதந்திரஇந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனச் சொல்லும் கமல், தேசப் பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற நவகாளி கலவரத்தை நியாயப்படுத்துகிறாரா? நவகாளியில் இந்து, சீக்கியப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை மறக்க முடியாது.

மதத்துக்காகக் கொலை செய்தால் மதத்தின் பெயரை சொல்வதில் தவறில்லை. இல்லாவிட்டால் அது தனிப்பட்ட கொலையாகும். காந்தி கொல்லப்பட்டதை முதலில் கண்டித்தது ஆர்எஸ்எஸ். காந்தி கொலை வழக்கில் முதல்தகவல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ்பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் ஒரு சாட்சிகூட ஆர்எஸ்எஸ்காரர்கள் இல்லை.

பள்ளப்பட்டியில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதுவன்முறையை ஏவிவிடும் வகையில் தீய நோக்கத்துடன் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் ஒரு இந்து விரோதி, திரைப்படத்தில்கூட அம்மன் வழிபாட்டை இழிவுபடுத்தியுள்ளார், அரங்கநாதரைக் கேவலமாகப் பேசியுள்ளார். இந்துக்கள் பற்றி பேசியதற்கு கமல்பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கமல் 100 கோடி இந்துக்களை அவதூறாகப் பேசியுள்ளார். காந்தி கொலையைக் கண்டிக்கும் கமல், கடலூர் மாணவி திலகவதிபடுகொலையை ஏன் கண்டிக்கவில்லை. கமல் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சரியானது.

கமலுக்கு நீதிமன்றம் என்னதீர்ப்பு வழங்கினாலும் வழங்கட்டும், ஆனால் மக்கள் மன்றத்தில் கமல்ஹாசனின் முகத்திரையை கிழிப்போம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close