[X] Close

கமல்ஹாசனை கைது செய்ய மன்னார்குடி ஜீயர் வலியுறுத்தல்: முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக விஹெச்பி அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:12 am
  • அ+ அ-

நடிகர் கமல்ஹாசன் ஓர் இந்து விரோதி. அவருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புஉள்ளது. எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் ஓர் இந்து விரோதி. அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது. எனவே அவரைஉடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராக அவர் பேசி வருகிறார். இதற்கு அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்றுதான் கூறுகிறோம். இந்துக்களுக்கு எதிராக பேச வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பின்னர் அவரின்கருத்துக்கு எதிராக பல்வேறு கட்ட கண்டனப் போராட்டங்களை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.

அரசியல் லாபத்துக்காக வாக்குகளைப் பெறுவதற்காக இந்து ஆதரவாளர்களை தீவிரவாதிகள் என்று விமர்சித்து வருகிறார். அவர் ஒவ்வொரு இடங்களிலும், அதற்கு ஏற்றாற்போல் பேசி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விஹெச்பி கண்டனம்

ராமேசுவரத்துக்கு நேற்று வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்ஹாசனுக்கு நாவடக்கம் மிகவும் தேவைப்படுகிறது. அவருக்கு சரித்திரம் என்பதே தெரியாது. அவருக்குப் பின்னால் இருந்து யாரோ செயல்படுகிறார்கள். அவர் தேர்தலுக்கு செலவு செய்யும் பணம் எங்கிருந்து வருகிறது?ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்ற மகான்கள் பிறந்த இந்துமதத்தை கமல்ஹாசன் கேவலமாகப் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. அதற்காக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. மேலும் சென்னையில் உள்ள கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்டு எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அதில் குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் முகாம் அமைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close