[X] Close

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்


60

  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:06 am
  • அ+ அ-

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்று காலையில் ஒரு விமானம் வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். தஞ்சாவூரை சேர்ந்த சாகுல்அமீது(42) என்ற நபரின் உடமைகளை சோதனை செய்தபோது, அதில் குங்குமப்பூ பாக்கெட்கள் இருந்தது தெரியவந்தது. ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த குங்குமப்பூ முதல் தரமானவை. 31 கிலோ எடைகொண்ட இந்த குங்குமப்பூவின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம்.

தங்கக் கட்டி பறிமுதல்

அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கும்பகோணத்தை சேர்ந்த முகமது பைசல்(33) என்பவர் வந்தார். அவரை சோதனை செய்தபோது 400 கிராம் எடையுள்ள தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.13 லட்சம்.

குங்குமப்பூ, தங்கம் கடத்திய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close