[X] Close

பராமரிப்பு பணியால் இன்றுமுதல் மின் ரயில் சேவை மாற்றம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:00 am
  • அ+ அ-

தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை மற்றும் ராயபுரம் யார்டில் இன்று முதல் 22-ம் தேதி வரையில் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிநடக்கவுள்ளதால் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணி செல்ல வேண்டிய மின்சார ரயில் சென்ட்ரலுக்கு மாற்றிவிடப்படுகிறது. இதே போல், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு அதி காலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close