[X] Close

தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க தேனிக்கு வந்த மின்னணு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:04 am
  • அ+ அ-

கோவை, திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சமீபத்தில் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அதற்குஎதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகளில் 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடப்பதாகவும், மேலும் அங்கு மின்னணு இயந்திரங்கள் இல்லாததால் அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து மேலும் 50 மின்னணு இயந்திரங்கள் தேனிக்கு கடந்த 15-ம் தேதி அனுப்பி வைக்கப் பட்டன. இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக காங்கிரஸ் சார்பில் அதன் ஊடகத்துறைத் தலைவர் ஆ.கோபண்ணா, மூத்த வழக்கறிஞர்கள் சூர்யபிரகாஷ், எஸ்.கே.நவாஸ் ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப் பதாவது: தேனி மக்களவைத் தொகுதியில் மே.19-ம் தேதி நடக்கும்மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இதனால், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் அத்தனை சீட்டுகளையும் எண்ண வேண்டும். இவ்வாறு செய்தால்தான் தேனி மக்களவை மறுவாக்குப்பதிவின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அதிமுக தேனி வேட்பாளர், தேர்தல் ஆணைய பணியாளர் களுடன் இணைந்து தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித் துள்ளன. இருப்பினும், ஓபிஎஸ் தனது அதிகாரம், பணம், ஆள்பலத்தைக் கொண்டு மின்னணு இயந்திரத்தில் திருத்தங்கள் செய்தேனும் தன் மகனை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

ஏற்கெனவே கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பாக காங்கிரஸ், திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த 50 இயந்திரங்களையும் திருப்பி அனுப்புவதாக உறுதி அளித்தார்.

உள்நோக்கத்துடன்..

ஆனால் தற்போதோ தேனி தொகுதிக்கு மே 15 அன்று மீண்டும் 50 மின்னணு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இது அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக சட்டவிரோத உள்நோக்கத்துடன் செய்யப்பட் டுள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளை திருத்தி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார். எனவே, கோவை, திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந் திரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மக்களுடைய வாக்குகளை திருத்த நினைக்கும் அதிமுக வேட்பாளரின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close