[X] Close

சென்னையில் தரமற்ற 280 வாட்டர் கேன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை


280

  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:37 am
  • அ+ அ-

சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தரமற்ற 280 வாட்டர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ஒரு நாளுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாட் டர் கேன்கள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இந்த கேன் களில் உணவு பாதுகாப்பு துறை யின் உரிமம் எண், தயாரிக்கப்பட்ட தேதி உள்ளிட்டவை அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டிருக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள் ளன. இவற்றை மீறி விற்பனை செய்யப்பட்டு வரும் வாட்டர் கேன்களை பறிமுதல் செய்யப்படு கின்றன.

இந்நிலையில், சென்னை ரெட்டேரி சிக்னல் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று அவ்வழியாக வாட்டர் கேன்களை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர். 15 வாகனங் களில் ஏற்றி வரப்பட்ட 1,830 கேன் கள் ஆய்வு செய்யப்பட்டன. உடைத்த கேன்களில் தண்ணீர் நிரப்பட்டிருந்தது, லேபிள் முறை யாக ஒட்டப்படாதது, குடிநீர் தூய் மையாக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 37 கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் 16 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 1,038 கேன் களில் 247 கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு, நேற்று சென்னையில் 2 இடங் களில் நடத்தப்பட்ட ஆய்வில் விதி களை மீறி விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 284 தர மற்ற வாட்டர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close