[X] Close

பகலில் சமையல் வேலை - இரவில் திருட்டு: பிரபல கொள்ளையன் அண்ணாநகரில் கைது


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:38 am
  • அ+ அ-

பகலில் சமையல் வேலை பார்த்துவிட்டு, இரவில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் அண்ணாநகரில் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அடுத்தடுத்து பணம் திருடப்பட்டு வந்தது. கொள்ளையனைப் பிடிக்க அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

முதல்கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில்,அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நடமாடுவது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர் அரியலூரைச் சேர்ந்த இளைஞர் சிவா என்பதும், வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது. பகலில் சமையல் வேலை செய்யும் இவர், ஆடம்பர செலவுகளுக்காக இரவில் திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close