[X] Close

திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றங்கரையில் கிடந்த 3000 ஆதார் அட்டைகள்


3000

  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:21 am
  • அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முள்ளி யாற்றங்கரையில் சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் கிடந்தன.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு எல்லை நாகலடி என்ற இடத்தில் முள்ளியாற்றங்கரை பகுதியில் நேற்று காலை சென்ற அப்பகுதி மக்கள், 3 சாக்கு மூட்டைகள் கிடப்பதைப் பார்த்தனர். மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் இருந்தவை பொதுமக் களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டைகள் என்பது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சி யர் ராஜன்பாபு, கிராம நிர்வாக அலுவலர் அப்பாஸ் மந்திரி மற்றும் வருவாய்த் துறையினர், சாக்கு மூட்டைகளில் இருந்து பிரித்து கொட்டப்பட்டுள்ள ஆதார் அட்டைகளை பார்வையிட்டனர். அவற்றில் பெரும்பாலானவை கட்டிமேடு, ஆதிரெங்கம், பாமணி, வடபாதி, தென்பாதி உள்ளிட்ட கிரா மங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டைகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அப்பாஸ் மந்திரி புகார் அளித் தார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், திருத் துறைப்பூண்டி பகுதியில் உள்ள அஞ்சலகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆதார் அட்டைகளை அஞ்சல் துறையினர் முறையாக விநியோகிக் காமல், மூட்டையாகக் கட்டி தூக்கி வீசியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close