[X] Close

ரேக்ளாவை தடை செய்யக் கோரும் பீட்டா: மாடுகள் துன்புறுத்தல் என குற்றச்சாட்டு


peta-demands-rekla-ban

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 May, 2018 18:15 pm
  • அ+ அ-

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ரேக்ளா பந்தய போட்டிகளின் போது காளை மாடுகள் துன்புறுத்தப்பட்டதாகவும், இந்த போட்டிகளை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீட்டா அமைப்பு கோரியுள்ளது. மேலும் இத்தகைய போட்டிகளை தடை செய்யவும் கோரியுள்ளது. 

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று அதற்கு தடை வாங்கிய அமைப்பு பீட்டா. தற்போது தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ரேக்ளா ரேஸ் எனப்படுகிற காளை மாட்டு வண்டிப் பந்தயத்தை தடை செய்ய வேண்டும் என்று பீட்டா கோரியுள்ளது.

தங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, ஜனவரி 21 மற்றும் பிப்ரவரி 4ஆம் தேதிகளில், திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்த போட்டிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது. 

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாடுகளுக்கு மின்சார ஷாக் வைக்கப்படுகிறது, மாடுகளின் மூக்கணாங் கயிறு கடுமையாக இழுக்கப்படுகிறது, ஆணிகள் இருக்கும், கூரான மரக் கட்டைகளை வைத்து மாடுகளை அடிக்கின்றனர். மாடு வேகமாக ஓட, அதன் வால் கடிக்கப்பட்டு, வேகமாக இழுக்கப்படுகிறது" என்று பீட்டா குறிப்பிட்டுள்ளது.

பீட்டா அமைப்பைச் சேர்ந்த நிகுஞ்ச் சர்மா, வெப்பமான சாலைகளில் மாடுகள் வேகமாக ஓட, இரக்கமின்றி தாக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், இது போல மாடுகளை வைத்து விளையாடப்படும் குரூரமான நிகழ்ச்சிகளுக்கு பீட்டா இந்தியா அமைப்பு தடை கோரும் என்றும் கூறினார். 

ரேக்ளா பந்தயங்களின் போது சில மாடுகள் கட்டுப்பாடை இழந்து தரையிலும், வைக்கப்பட்டிருந்த தடுப்புகளிலும் மோதி நின்றன. இதையும் சுட்டிக்காட்டிய பீட்டா, இந்த விலங்குகளுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகள் கூட சரியாக தீர்க்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. 

- பிடிஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close