[X] Close

சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து: ஒருவர் மரணம்; 4 பேர் காயம் 


4

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:06 am
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வரகனூரில்சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில், நேற்று மீண்டும் வெடி விபத்துஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த பிப்.22-ல் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் இறந்தனர். இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட சிலர் இந்த பட்டாசு ஆலை வளாகத்தில் இருந்த முட்செடிகளை வெட்டி,விறகு கரி தயாரிக்கும் பணிக்காககூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். நேற்று தீ மூட்டி சமையல் செய்து கொண்டிருந்தபோது பழைய கழிவு வெடி மருந்துகள் கிடந்த இடத்தில் தீ பரவி, வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. தீப்பொறி தெறித்ததில் பட்டாசு ஆலையில் ஓர் அறையில் இருந்த வெடி பொருட்களும் வெடித்து சிதறின.

இதில், காயமடைந்த கோபால்(61), அர்ஜுன்(17), குருசாமி(60) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், கே.காமராஜ்(58), கனகராஜ்(46) ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கோபால் நேற்று உயிரிழந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close