[X] Close

கமலுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:03 am
  • அ+ அ-

கமல்ஹாசனுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அகில பாரத துறவியர் சங்க துணைத் தலைவர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் குற்றம்சாட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக்கொண்டு, லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்து மதத்துக்கு விரோதமாக பேசி வருகிறார். இந்துக்களை தீவிரவாதிகள் என்றும், நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்றும் பேசுகிறார்.

கமல்ஹாசன் தனது சுயலாபத்துக்காக முஸ்லிம் தீவிரவாத இயக்கத்துடன் இருந்துகொண்டு இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவருகிறார்.

கமல்ஹாசன் நல்ல நடிகர். இந்து விரோதமான நடிப்பை, திரைப்படத்தில் காட்ட வேண்டிய நடிப்பை தற்போது வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறார். இதுபோன்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அகில பாரத துறவியர் சங்கத்தினர் அவரை எங்கும் நடமாட விடமாட்டார்கள். பொதுமக்களே அவரை தடுப்பார்கள்.

நாதுராம் கோட்சே நாட்டின் மீது இருந்த பக்தியின் காரணமாகத்தான் இதைச் செய்தாரே தவிர, வேறு யாரோ சொல்லி செய்யவில்லை. கமல்ஹாசன், சாருஹாசன் ஆகியோர் எப்போதோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டனர். அதனால்தான் கமல்ஹாசன் இந்து விரோத கருத்துகளை பேசி வருகிறார்.

கமல்ஹாசன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டாலும், அவரது பேச்சு இந்து விரோதப் பேச்சு என்பதை துடைத்து விடமுடியாது. கமல்ஹாசன் மட்டுமல்ல, எந்த இந்து துரோகியையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.

மநீமவை தடை செய்ய மனுபயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கமல்ஹாசன் எனக் கூறுகிறீர்கள். அவர் தனது கட்சியை எப்படி பதிவு செய்தார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "தேர்தல் ஆணையத்துக்கு பொய்யான தகவலை கொடுத்துதான் கமல்ஹாசன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது கட்சியைத் தடை செய்யக் கோரி அகில பாரத துறவியர் சங்கத்தின் சார்பில் மனு அளிப்போம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close