[X] Close

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்; மக்கள் நலத் திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் வேண்டுகோள்


4

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:54 am
  • அ+ அ-

தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடிமராமத்து, மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் ஆகிய திட்டங்கள் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுஅமைக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடியில் நிறைவேற்ற அடிக்கல்நாட்டப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் 70 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ரூ.1,223 கோடியே 35 லட்சத்தில் இலவசமாக 4 இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 50 கோடியே 90 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.9,151 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,600 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஒரு லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகன மானியமாக ரூ.252 கோடியே 50 லட்சம்வழங்கப்படும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள்ரூ.5 ஆயிரத்து 568 கோடியே 38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.62 கோடியே 43 லட்சத்தில் 15,661 பேருக்கு இலவச கறவைப் பசுக்களும், ரூ.315 கோடியே 3 லட்சம் செலவில் 2 லட்சத்து 45 ஆயிரத்து199 பேருக்கு இலவச ஆடுகளும்வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் இனப் பிரிவுகளில் உள்ள குடும்பன் உள்ளிட்ட 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் அரசு தொடர்ந்து வெற்றிநடை போடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைத்திடவும் வரும் 19-ம் தேதி நடக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close