[X] Close

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:48 am
  • அ+ அ-

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.கோபிகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற 4 வயது குழந்தையை டிரைவரும், கிளீனரும் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல நொய்டாவிலும் 3 வயது குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகிஉள்ளது. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை.போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இயந்திரத்தன்மையுடன் வாகனங்களை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை வாகனத்தின் உள்ளே பொருத்திகண்காணிக்க வேண்டும். இந்த கேமராக்களை பள்ளி இணையதளத்துடன் இணைத்து வாகனங்களின் இயக்கத்தையும், குழந்தைகளையும் பெற்றோர்களும் கண்காணிக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஏற்கெனவே தமிழககல்வித் துறைச் செயலர்,போக்குவரத்துத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மனு அளித்தும் எந்தநடவடிக்கையும் இல்லை. எனவேஇதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close