[X] Close

முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம்: கேரள அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்தது


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:21 am
  • அ+ அ-

முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்தத்துக்கான கட்டுமானப் பணியை மேற் கொண்டு வருவதாக கேரள அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

கேரள வனம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுலாத் துறை செய லர்கள், பெரியார் புலிகள் சரணா லய துணை இயக்குநர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவ மதிப்பு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதை தடுக்கும் வகையில் அணையின் நீர்தேக்கப் பகுதியான ஆனவச்சலில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை கேரள அரசு மேற்கொண்டது.

அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்பகுதியில் வாகன நிறுத்தத் துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என ஏற்கெனவே கேரள அரசை அறி வுறுத்தியுள்ளது. ஆனால், தற் போது நீதிமன்ற உத்தரவை மீறி அணையின் நீர்தேக்கப் பகுதியில் கேரள அரசு அத்துமீறி வாகன நிறுத்தத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரு கிறது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்பதால் கேரள அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close