[X] Close

மாம்பலத்தில் தகராறின்போது கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய 2 குற்றவாளிகள் கைது; கத்தி பறிமுதல்


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 21:11 pm
  • அ+ அ-

மாம்பலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட தகராறில், கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 2 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் விக்னேஷ் (25) முகலிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்கி வருகிறார். தி.நகர், தணிகாசலம் சாலை வழியே விக்னேஷ் சென்று கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீது இவரது இருசக்கர வாகனம் உரசியது. இதில் விக்னேஷ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மேற்படி குற்றவாளிகளின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் குற்றவாளியின் உருவத்தை வைத்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தி.நகரைச் சேர்ந்த சந்துரு (40), தேனாம்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (32) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்துரு என்பவர் R-1 மாம்பலம் காவல் நிலைய ஏற்கெனவே சில வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும், மற்றொரு குற்றவாளியான கணேஷ் என்பவர் சந்துருவின் மைத்துனர் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close