[X] Close

காந்திக்கு கொள்ளுப்பேரன் என்று கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் அப்படியா வாழ்ந்தார்: எச்.ராஜா ஆவேசம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 19:40 pm
  • அ+ அ-

மகாத்மா காந்தி வெளிநாட்டுக்குச் செல்லும் போது தன் தாயாருக்கு 3 வாக்குறுதிகளை அளிக்கிறார். மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பிற பெண்களைத் தவறாகப் பார்க்க மாட்டேன் என்று உறுதிமொழிகள் அளித்தார், காந்திக்குக் கொள்ளுப்பேரன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கமல்ஹாசன் அப்படித்தான் வாழ்ந்தாரா? என்று எச்.ராஜா காட்டமாகக் கேட்டுள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சிக்கு எச்.ராஜா மேலும் கூறும்போது கமல்ஹாசனை இந்து விரோதி என்று கூறியதோடு, அன்பே சிவம் படத்தில் ஒரு தாய் விபூதி இடுகிறார் அதை அழிக்கிறீங்க... இன்னொரு தாய் சிலுவை போடறாங்க ஏற்றுக்கிறீங்க.. விஸ்வரூபம் படத்துல 16-17 இடங்கள்ல வெட்டினீங்களே எதனால? ஏ மாமி கோழிக்கறி நல்லாயிருக்கா என்ற எடத்துல மாமி என்ற வார்த்தையை நீக்கச் சொன்னாங்களே கமல் கேட்டாரா?

 

ஜாதியை இழிவு படுத்துறதில்லையா கமல்ஹாசன். இவர் வைஷணவம் பேசறாரே, இவர் வைஷ்ணவரா? யாரை ஏமாற்றுகிறார் கமல்ஹாசன்.  பயங்கரவாதி என்ற வார்த்தையைச் சொல்லவில்லை என்று நாடகமாடுகிறாரே ஏற்றுக் கொள்ள முடியுமா? கமல்ஹாசன் முதல்ல மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

 

கமல்ஹாசன் காந்தியை சுட்ட கோட்ஸே குறித்து தன் ‘இந்து தீவிரவாதி’ கருத்தை முன் வைக்க அது கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில் திருப்பரங்குன்றத்தில் கமல் பேசும்போது,   “"நான் அரவக்குறிச்சியில் பேசியதற்காக என் மீது கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. அவமானங்களைக் கண்டு அஞ்சவில்லை. என் பேச்சை முழுவதுமாக கேட்காமல் நுனியை மட்டும் கத்தரித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒரு முறைதான் சொன்னேன். ஆனால், அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன ஊடகங்கள். இன்று நான் தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன். அதனால் நான் தீவிரமாகத்தான் பேசுவேன். அதில் வன்முறை இல்லை. வார்த்தை ஜாலங்கள் இல்லை. நான் தீவிரவாதி என்றுதான் சொன்னேனே தவிர பயங்கரவாதி, கொலைகாரன் என்றெல்லாம் சொல்லவில்லை”என்றார்.

 

இதனையடுத்து எச்.ராஜா கூறும்போது, “கமல்ஹாசன் மீண்டும் குழப்ப நினைக்கிறார்.. பயங்கரவாதம் வேறு, தீவிரவாதம் வேறு என்று பேசுகிறார் இதனை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் முந்தையப் பேச்சில் அவர் அந்த அர்த்தத்தில் பேசவில்லை.  அவர் சொல்வது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து அப்டீன்னு சொல்றாரு. மகாத்மா காந்தியின் படுகொலையை எவரும் நியாயப்படுத்த முடியாது. கோட்சே செய்தது கொலை அதற்காக அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். நவகாளியைப் பற்றி கமல்ஹாசனுக்குத் தெரியுமா ட்ரெய்ன் டு பாகிஸ்தான் புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். அதுவும் இதனை பள்ளப்பட்டில சொல்றாரு” என்று கூறி கமல்ஹாசன் சிலபல வாக்குகளுக்காக இப்படிப் பேசுவதாக கூறினார் எச்.ராஜா.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close