[X] Close

பொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:03 pm
  • அ+ அ-

தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க தமிழிசை பரபரப்புச் செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகி விட்டதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, காணாமல் போன பாஜக தலைவர் தமிழிசை அதிமுகவின் நிர்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.                

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியிலும் திமுகவின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க பரபரப்புச் செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது.                

கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன்னெடுத்ததையும், அதில் திமுக தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் மீது முன்மொழிந்ததையும் அனைவரும் நன்கறிவர்.                

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவோடு பின்வாசல் வழியாக பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந்தெடுத்த பொய் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.                

திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய "பொய் சொல்லக் கூடாது பாப்பா" என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது", என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close