[X] Close

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு  


  • kamadenu
  • Posted: 15 May, 2019 15:49 pm
  • அ+ அ-

-கி.மகாராஜன்

கோட்சே பேச்சு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல் தரப்பில்  முறையீடு செய்யப்பட்டது.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர் மீது கரூர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக அவரது பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும் நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது. வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதனைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close