[X] Close

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு இன்றுஆராதனை: சிறந்த எழுத்தாளருக்கு விருது


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:13 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

எழுத்தாளர் பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா இன்று (15.5.19) மாலை சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெறுகிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த ஆண்டு (2018) மே மாதம் 15ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த வருடம் இன்று பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை ஆராதனை விழா நடைபெறுகிறது.

பிரபல கர்நாடக சங்கீதப் பாடகர் ஓ.எஸ்.அருண் இன்னிசைக் கச்சேரியில் இருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது.

 

எழுத்தாளர் பாலகுமாரன் இலக்கிய விருது எனும் பெயரில் எழுத்தாளர் ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. ஊடகத்துறையில், விஜய் டிவியில் பணிபுரியும் எழுத்தாளர் நரனுக்கு, பாலகுமாரன் விருது வழங்கி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதை வழங்கி சூர்யா பாலகுமாரன் உரையாற்றுகிறார்.

இதையடுத்து,   எழுத்தாளர் இந்துமதி, பாரதி பாஸ்கர், வி.ராம்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். எழுத்தாளர் நரன் ஏற்புரை வழங்குகிறார்.

எழுத்தாளர் பாலகுமாரன் டிரஸ்ட் மற்றும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் இணைந்து விழா ஏற்பாடுகளை  செய்துவருகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close