[X] Close

கடும் வறட்சியால் தீவனப் பற்றாக்குறை: கழிவுநீரில் வளரும் தாவரங்களை உட்கொள்ளும் கால்நடைகள்; நோய் தாக்குதலால் இறக்கும் அபாயம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 09:02 am
  • அ+ அ-

கடும் வறட்சி காரணமாக தீவனத் துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கால்நடைகள் கழிவுநீரில் வளரும் தாவரங்களை அதிகளவில் உட்கொள்கின்றன. இதனால் அவை திடீரென இறக்கும் அபாயம் ஏற்படுகிறது.

பருவமழை பொய்த்ததாலும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. ஆங் காங்கே ஆழ்துளைக் கிணறுகள் மூலமே சிறிய அளவில் விவசாயம் நடக்கிறது. பனை மரங்களே பட்டுப்போகும் அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடும், வெயிலும் சுட்டெரிக் கிறது. புல், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் அவற்றை உட்கொள்ளும் கால்நடைகள் தீவனமின்றி தவித்து வருகின்றன. மேலும் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட வழியில்லாத கிராமப்புற விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்கத் தொடங்கி உள்ளனர்.

வைகை ஆற்றங்கரைகளை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடை கள் வளர்ப்போர் மற்றும் மாநகராட்சியின் சில பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்போர் தீவனத்தை விலை கொடுத்து வாங்க முடியாமல் பரவலாக அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் வலம் வரும் கால்நடைகள் ஆங்காங்கே கிடக்கும் காகிதம், காய்கறிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை சேர்த்து உட்கொள்கின்றன. மேலும் கழிவுநீரில் வளர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரைகள் போன்றவற்றையும் அதிகம் உட்கொள்கின்றன. இதனால் பாதிக்கப்படும் கால்நடைகள் திடீரென இறந்து விடுவதால் கால்நடைகள் வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, திருப்பரங்குன் றத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவர் ஆர். உமாராணி கூறிய தாவது: கழிவுநீரில் வளரும் ஆகாயத் தாமரை மற்றும் பசுந்தீவனமாக இருந்தாலும் அதில் ‘நைட்ரேட்’ அளவு அதிகமாக இருக்கும். அதனை கால்நடைகள் உட்கொள்ளும்போது நைட்ரேட் விஷத் தன்மை உடலில் சேர்ந்து விடும். குறைந்த அளவில் உட்கொண்டால் பாதிப்பு இருக் காது. ஆனால், அதிகமாக உட் கொண்டால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து விடும். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு குறையும்பட்சத்தில் கால் நடைகளுக்கு சோர்வு ஏற்படும். பாலின் அளவும் குறைந்து விடும். மற்ற இரைகளை உண்ணாது. சினைப் பிடிக்காத தன்மை அதி கரிக்கும். அதிகளவு உண்ணும் போது உடனடியாக இறப்பு ஏற்படும். ஆகாயத் தாமரையில் உள்ள விஷத்தன்மையை குறைப்பதற்கு அவற்றை வெளியே எடுத்து சுமார் 12 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரை உலர வைத்து கொடுப்பதால் நைட்ரேட் தன்மை குறைந்து பாதிப்பு ஏற்படாது. பொதுவாக, ஆகாயத் தாமரையில் புரதச் சத்து அதிகமாக இருப்பதால், வயிற்றில் உப்புக் கோளாறு ஏற்படும். எனவே ஒரு நாளைக்குரிய தீவனத்தில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு ஆகாயத் தாமரைகளை கொடுத்தால் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close