[X] Close

அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்விநியோகம்: உயிரிழப்புகளை தடுக்க உடனே ஏற்பாடு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 09:01 am
  • அ+ அ-

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 நோயாளிகள் இறந்ததைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு ‘டீன்’களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மின்வாரியம் 24 மணி நேரத் தடையில்லா மின்சாரம் வழங்குகிறது. மழை போன்ற இயற்கைச் சீற்றத்தின்போது மரங்கள் விழுந்து மின்விநியோகம் பாதிக்கும். அப்போது மாற்று ஏற்பாடாக மின் விநியோகம் செய்ய ஜெனரேட்டர்கள் இயக்கப்படும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி இரவு மழையால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. அப்போது ஜெனரேட்டரும் பழு தடைந்ததால் இயக்க முடியாமல் ஐசியூ அறையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 5 பேர் வெண்டிலேட்டர் இயங்காமல் இறந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் முதற்கட்டமாக தடையில்லா மின்சார வசதிக்கு உடனே ஏற்பாடு செய்யுமாறு ‘டீன்’களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தடையில்லா மின்சாரத்துக்காக அரசு மருத்துவமனைகளுக்கு 160 யூபிஎஸ்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட 16 யூபிஎஸ்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. அதேபோல் பழுதடைந்த ஜெனரேட்டர்களை முறையாகப் பராமரித்து அதை பயன்படுத்தவும், கூடுதல் ஜென ரேட்டர்கள் வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. எந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டாலும் அவற்றை இயக்கவும், பழு தடைந்தால் பராமரிக்கவும் கூடுதல் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிக்க விவரம் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற் கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், அவற்றை விரைவாக செயல்படுத்தவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவ மனைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close