[X] Close

ராகுல் பிரதமரானதும் அதிமுக ஆட்சி அகற்றப்படும்: ஓட்டப்பிடாரம் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:45 am
  • அ+ அ-

ராகுல் பிரதமரானதும் அதிமுக ஆட்சி அகற்றப்படும் என, திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரைஆதரித்து மு.க.ஸ்டாலின் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். இதற்காக நேற்றுகாலை விமானம் மூலம் தூத்துக்குடிவந்த அவர், அங்கிருந்து காரில்அருகிலுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரத்துக்கு சென்றார். அங்கு வீடு வீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் செய்து, திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையாவுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது மக்கள் அவருக்கு பதநீர் கொடுத்து உபசரித்தனர்.

தொடர்ந்து, சக்கம்மாள்பும் காமராஜ்நகர், கூட்டாம்புளி ஆதிதிராவிடர் காலனி ஆகிய கிராமங்களுக்கு சென்ற ஸ்டாலின் வீடு,வீடாகச் மக்களை சந்தித்துபேசினார். அப்போது, ஒரு குடம் தண்ணீரை ரூ. 10 கொடுத்து வாங்குகிறோம். இந்த பகுதியில் கிடைக்கும் தண்ணீரை குடித்ததால் பலர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சீராக தாமிரபரணி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேருந்து வசதிகளும் போதுமானதாக இல்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய உதவிகள் கிடைக்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

அனாதை தொகுதி

இதற்கு பதிலளித்த ஸ்டாலின்,‘‘அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் வேண்டுமென்றே வழக்குகளை போட்டு தாமதப்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் தான் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அப்போது உங்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.

திமுக வேட்பாளர் சண்முகையாவை நீங்கள் வெற்றி பெறச்செய்தால், உங்களது பிரச்சினைகளுக்காக அவ்ர குரல் கொடுப்பார் என்றார்.

மாலையில் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்கநாயக்கன்பட்டி, பரிவல்லிக்கோட்டை ஆகிய இடங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, ‘‘மே 23-ம் தேதிக்கு பிறகு மோடி ஆட்சி போய்விடும். ராகுல்காந்தி பிரதமராக அமருவார். அப்போது அதிமுக ஆட்சியும் அகற்றப்படும்’’ என்றார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன், வேட்பாளர் எம்.சி. சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close