[X] Close

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:49 am
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் பதவியில் இருப்பவர், நாக்கை அறுத்துவிடுவோம் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தவறு என்றால், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். அதைவிடுத்து, அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசுவது ஏற்கத்தக்கதல்ல. இதை, முதல்வரும் பார்த்துக்கொண்டு, அமைதியாக இருக்கிறார். பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதை கண்டிக்கவில்லை.

எனவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மூன்றாவது அணியெல்லாம் அமைக்கப் போவதில்லை. அவர் பாஜக ஆதரவாளர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது ஏன் சந்திரசேகர ராவை சந்திக்கிறார் என்று தெரியவில்லை. ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பை, குழப்பமான சந்திப்பாகவே கருதுகிறோம்.

வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின்னர், எத்தனை பாலங்களில், எவ்வளவு மோசடி செய்திருக்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடுவோம். நான்கு அல்லது 5 அமைச்சர்கள் சிறைக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close