[X] Close

ஆளுங்கட்சியால் தான் வளர்ச்சியை கொடுக்க முடியும்: அரவக்குறிச்சியில் அன்புமணி பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:43 am
  • அ+ அ-

ஆளுங்கட்சியால்தான் வளர்ச்சியை கொடுக்கமுடியும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அரவக்குறிச்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: இந்த தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தொடரும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். டிடிவி தினகரனின் ஆசை அதிமுக தோற்க வேண்டும். ஸ்டாலினின் ஆசை அவர் முதல்வராக வேண்டும். எங்களின் ஆசை மக்கள் நன்றாக இருக்கவேண்டும்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் கொச்சையாக, கேவலமாக, மோசமாக, தனிநபர் விமர்சனம் செய்கிறார். வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. எங்கள் நோக்கமே வளர்ச்சிதான்.

இந்த தேர்தலில் கட்சி பார்க்காதீர்கள். வளர்ச்சியை பாருங்கள். ஆளுங்கட்சியால்தான் வளர்ச்சியை கொடுக்கமுடியும். நீங்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்யவேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close