[X] Close

கஜா புயலால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட ஆலங்குடி சமூக சேவகர் ‘515’ கணேசனுக்கு ரூ.10 லட்சத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டிக் கொடுத்த வீடு


515-10

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:44 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கஜா புயலால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட சமூக சேவகர் '515' கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுத்த வீடு நேற்று திறக்கப்பட்டது.

ஆலங்குடியைச் சேர்ந்தவர் '515' கணேசன். இவர், தனது கார் மூலம் இதுவரை 5,000-த்துக்கும் மேற்பட்ட சடலங்களை எவ்வித கட்டணமும் பெறாமல் ஏற்றிச் சென்று உதவியுள்ளார். இதுதவிர, 2,000 கர்ப்பிணிகளுக்கும் வாகன உதவி செய்துள்ளார். இவரது சேவை தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு 'இந்து தமிழ்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவருக்கு புதிய கார் கிடைத்தது.

மேலும், சென்னை மற்றும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்காகவும் கடலூர், கன்னியாகுமரில் புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கும் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு சென்று வழங்கிய கணேசனின் சேவையைப் பாராட்டி பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச் சுவல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், தகர ஷீட்களால் வேயப் பட்ட இவரது வீடு சேதமடைந்தது.

பிறருக்கு பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம், அதை தனக்கு ஏற்பட்ட பாதிப்பாகக் கருதி ஓடோடி உதவிய கணேசன் தங்குவதற்கு இடமின்றி மனைவியுடன் தவித்து வந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், ஆலங்குடிக்கு வந்து கணேசனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தனது சொந்த செலவில் ரூ.10 லட்சத்தில் புதிய வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு நேரில் வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 5 மாதங்களில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் வீட்டைத் திறந்து வைத்து, கணேசனிடம் ஒப்படைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close