[X] Close

மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே 2 பேரை வெட்டிக் கொல்ல முயற்சி


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:22 am
  • அ+ அ-

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே இரண்டு பேரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி மோா் மார்க்கெட் மற்றும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு கோஷ்டியினர் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கொலை முயற்சி வழக்கு தொடர்பாக காமராஜர்புரத்தை சேர்ந்த பிரதீப்(19) உள்ளிட்ட 3 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரவணம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். பிரதீப், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பாக பிரதீப், கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார்.

வழக்கம் போல் பிரதீப் நேற்று காலை நீதிமன்றத்துக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, தன் நண்பரான கணபதி சத்தி சாலையை சேர்ந்த தமிழ்வாணன்(22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக உப்பிலிபாளையம் சிக்னல் சந்திப்புக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞர்கள் வழிமறித்து பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை சரமாரியாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பினர்.

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிதறி ஓடினர். தகவல் அறிந்து மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். காயமடைந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகர போலீஸார் கூறும் போது,‘‘இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொல்ல முயன்ற 4 நபர்களின் விவரம் தெரியவந்துள்ளது. அதை வைத்து 4 பேரையும் தேடி வருகிறோம். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்’’என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close